இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின் மூளை மற்றும் முன்னான் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கரு அழிந்து போவதற்கோ அல்லது அங்கக் குறைபாடான குழந்தை பிறப்பதற்கோ சந்தர்ப்பம் அதிகம். இதைத் தடுப்பது மிகவும் இலகு. கருத்தரிப்பதற்காக எதிர் பார்த்திருக்கும் பெண்கள் போலிக் அசிட் மாத்திரை ஒன்றை ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொண்டாலே போதுமானது. கருத்தரிக்க மூன்று மாதத்திற்கு முன்னமே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரையை வைத்தியரின் அனுமதி இல்லாமலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகவும் குறைவு. கருத்தரித்த பின் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு இந்த மாத்திரை உட்கொள்ளப்பட வேண்டும். கருத்தரித்து மூன்று மாதத்திற்கு பின் இந்த மாத்திரையை எடுக்க வேண்டியதில்லை. ஆகவே திருமணம் முடிக்கப்போகும் பெண்களே திருமணம் முடித்தவுடன் குழந்தைக்காக முயற்சி செய்யப் போகிறீர்கள் என்றால் திருமணத்திற்கு முன்பே போலிக் அசிட் மாத்திரையை பாவியுங்கள். |
Saturday, December 18, 2010
திருமணம் முடிக்கப் போகும் /கருத்தரிக்க காத்திருக்கும் பெண்கள் அறிய வேண்டியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment