Saturday, December 18, 2010

விண்ணில் புதிய கிரகம்: இந்தியர் கண்டுபிடிப்பு

விண்ணில் புதிய கிரகம் இருப்பதை இந்திய அறிவியல் அறிஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த நிக்கி மதுசூதன் என்பவர் இதனை கண்டுபிடித்துள்ளார்.
பனாரஸ் இந்து பல்கலையில் படித்த அவர் தற்போது நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்சிடான் பல்கலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கண்டுபிடித்த கிரகத்திற்கு W.A.S.P .12பி (வைட் ஆங்கில் ஸ்பேஸ் பிளானெட்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கிரகம் பூமியில் இருந்து 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் கொண்டதாகவும் இருக்ககூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இது ஜூபிடர் கோளை காட்டிலும் பெரியதாகவும் கார்பன் நிறைந்தும், மற்ற வாயுக்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இந்தகோள்கள் குறித்து 2009ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், இங்கிலாந்து விண்வெளி மையமும் விரிவாக ஆராய்ந்து வருகிறது.

No comments:

Post a Comment