Saturday, December 18, 2010

தாம்பத்தியம் தொடர்பாக சில பிழையான அணுகு முறைகள்

பொதுவாக திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் ஆண், பெண் இருவருக்குமே தாம்பத்யம் பற்றிய ஆர்வங்களும் குழப்பங்களும் இருக்கும். குறிப்பாக, முதலிரவு பற்றிய பல 'மித்'கள் அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். அவற்றில் இருந்து தெளிவுபெற சில ஆலோசனைகள் இங்கே...
முதலிரவு என்றாலே பெரும்பாலான ஆண் - பெண்களிடையே தேவையில்லாத பயம் தொற்றிக்கொள்கிறது. சுயஇன்பம் கொள்வதால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்று போலி டாக்டர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள தவறான விழிப்பு உணர்வு, ஆண்களை அலைக்கழிக்கும். தாழ்வு மனப்பான்மை, பயம் கவ்விக் கொள்ளும். ஆனால், சுயஇன்பம் என்பதே கிட்டத்தட்ட இயற்கை சார்ந்த ஒரு விஷயம்தான். அந்தப் பழக்கம் பலருக்கும் இருக்கும். எனவே, அதை நினைத்தெல்லாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. சுயஇன்பத்துக்கும் ஆண்மைக் குறைவுக்கும் தொடர்பு இல்லை.
பெண்களைப் பொறுத்தவரை, 'கன்னித்திரை கிழியாமல் இருப்பதுதான் கன்னி என்பதற்கான சான்று' என்று ஒரு கதை பின்னப்பட்டுள்ளது. அதுவும் தவறான ஒரு கருத்துதான். ஏனெனில், சைக்கிள் ஓட்டுவது, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு கன்னித்திரை கிழிய வாய்ப்புள்ளது. எனவே, அதை வைத்து 'கன்னி' டெஸ்ட் செய்வது அபத்தம்.
முதலிரவின்போது ரத்தம் அதிகமாக வெளியேறும் என்று தோழிகள் சொல்லிக்கொடுக்கும் தவறான கருத்துக்களால் பெண்களுக்கு முதலிரவு பயம் தொற்றிக்கொள்கிறது. விளைவாக, முதலிரவில் கணவன் அருகில் வந்தாலே சிலர் பயத்தின் உச்சத்துக்கு போய் அலறி அரற்றி விடுகிறார்கள். இதுவும் ஒரு தவறான புரிதலேயாகும்.
முதலிரவின்போதே முழுமையான இன்பத்தை அனுபவித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம். பொதுவாக, திருமணமான ஒரு தம்பதி முழுமையான இன்பம் பெற வாரக்கணக்கில், மாதக்கணக்கில்கூட ஆகலாம் என்பதே மருத்துவ உண்மை.
முதலிரவு வேளையில் தம்பதி மனம் விட்டுப் பேசலாம். அன்றைய தினமே இன்பம் அனுபவிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இருவருக்குள்ளும் இருக்கும் தயங்கங்கள் விலகும்வரை சில நாட்கள் காத்திருக்கலாம்.
தாம்பத்யம் என்பது பார்ட்னர்ஷிப். தங்களுடைய பார்ட்னரின் விருப்பத்தின் பேரிலேயே எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும். மிரட்டி பணிய வைக்கக் கூடாது. தனக்குப் பிடித்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும்.
ஆண்களுக்கு அவுட்டிங், பொழுதுபோக்குகள் பிடிப்பதுபோல் பெண்களுக்கு அன்பு பாராட்டுவது, ஆழமாக கருத்துப் பரிமாறுவது பிடிக்கும். எனவே, அன்பில்லாத தாம்பத்யத்தை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை. அதேபோல, நெருக்கமாகப் பேசிவிட்டு உறவை தவிர்க்கும் பெண்ணின் மீதும் ஆணுக்கு வெறுப்பு ஏற்படுவது இயல்பான விஷயமாகும்.
திருமணத்துக்குப் பின் செக்ஸ் சம்பந்தமான எந்த சந்தேகமாக, குழப்பமாக, குறையாக இருந்தாலும் தயங்காமல் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை கேளுங்கள். அது, இடைவெளியை சீக்கிரமே இணக்கமாக்கும்.

No comments:

Post a Comment