வயலினை உடன் எடுத்துச் செல்ல தனி இருக்கைக்கான பயணச்சீட்டு வாங்காததால் ஒரு பள்ளிச் சிறுமியும் , தந்தையும் வானூர்தியில் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இது வெளிநாடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 12 வயதாகும் பிரான்செஸ்கா ரிஜ்க்ஸ் ஒரு இசைப் பள்ளி மாணவி. இவர் தன்னுடைய வயலினை கையில் எடுத்துச் செல்ல முயன்ற போது வானூர்தி நிலைய நுழைவாயிலில் இருந்த பணியாளர்கள் சோதனையிட்டு வயலினுக்கு தனியாக பயணச் சீட்டு எங்கே எனக் கேட்டனர்.
வானூர்தி நிலைய பணியாளர்கள் எடுத்துச் செல்லலாம் எனக் கூறியதாக அவர் ததை கூறியும் அதை அனுமதிக்கவில்லை. அதற்கு தனியாக 190 பவுண்டுகள் மதிப்பிலான டிக்கெட் வாங்கும்படியும் கூறினர். இது சிறுமி மற்றும் அவர் தந்தையின் பயணச் சீட்டு தொகையைக் காட்டிலும் இரு மடங்காகும்.
இல்லையென்றால் வயலினை விட்டுச் செல்ல நேரும் என்பதால் சிறுமியின் தந்தை கட்டணம் செலுத்த ஒப்புக் கொண்டார். ஆனால் அதற்குள் வானூர்தி டிக்கட் பெறும் நேரம் முடிந்து விட்டது.
இந்தநிலையில் வயலினை கையில் எடுத்துச் செல்ல அனுமதியளிக்கும வானூர்தியில் போகுமாறு அவர்களிடம் கூறப்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் தந்தை பயணச்சீட்டிற்கான பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளதுடன் , இசைத்துறையை சேர்ந்தவர்கள் சம்பந்தபட்ட வானூர்தி நிறுவனத்தின் சேவைகளை புறக்கணிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment