இவ்வாறு பிரிக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் போராடவும் கிளம்பியுள்ளார்கள். ஏனெனில் , திரையிலும் நிஜத்திலும் அவர்களது வாழ்க்கை இணைபிரியா அன்றில் பறவைகளுக்கு ஒப்பானது.
கேளிக்கைகளுக்கும், கிசுகிசுப்புக்களுக்கும், இணைவுகளுக்கும், பிரிவுகளுக்கும், பஞ்சமில்லாத இத்தாலிய திரையுலகமும், தொலைக்காட்சி உலகமும், விருதுகளாலும், கெளரவங்களாலும், புகழ்ந்து கொண்டாடிய ஜோடி, ரெய்மெண்டோ வியன்னெலோ, சாண்ட்ரா மொண்டேய். அரை நூற்றாண்டு காலம் இணைபிரியாது வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், இத்தாலி நாடு முழுவதையும் தங்கள் நடிப்பால், நகைச்சுவையால், சிரிக்க வைத்த இந்த ஜோடி, இன்று சரித்திரமாகி நிற்கின்றார்கள்.
ரெய்மெண்டோ , சாண்ட்ரா இருவரும் 50 களில் புகழ்பெற்ற நடிகர்கள். 1958 இல் திரையில் சந்தித்து தான் நண்பர்களானார்கள். நட்பு காதலாகி, திருமண பந்தத்தில் இணைந்தது 1962 ல்.
52 வருடங்கள், திரையிலும் சரி, நிஜத்திலும் சரி ஒருவர் இல்லாமல் மற்றவரை நீங்கள் பார்க்க முடியாது. சேர்ந்தே நடித்தனர். சேர்ந்தே வெளியில் சுற்றினர். சேர்ந்தே இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஏன் சேர்ந்து தான் விருதுகளை கூட வாங்கினார்கள். எளிமையான நகைச்சுவை, இணைபிரியாவாழ்வு எனச் சுற்றிவந்த இந்த ஜோடியை, இத்தாலியத் திரையுலகும், சின்னத்திரையுலகும், இலட்சியத் தம்பதிகளாக கொண்டாடி மகிழ்ந்தது.

ஆனால் காலத்தின் விதியினால், கடந்த ஏப்ரல் 15, ரெய்மொண்டோ தனது 87வது வயதில், இத்தாலியின் மிலானோவில் வைத்து இறந்து போனார். சாண்ட்ரா துவண்டு போனார். ரெய்மொன்டோவின் பிரிவிற்காக அழுததிலும் பாரக்க, சாண்டராவின் சோகத்தினைக் கண்டு கண்ணீர் வடித்தது இத்தாலி. ஏப்ரல் 17 இல் மிலானோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் இறுதிக்கிரியைகள் நடந்தது. இத்தாலியின் அதிபர் பெர்லுஸ்கோனி தன் வீட்டுத் துயர் போலப் பங்கெடுத்துக் கொண்டார். ரெய்மொண்டோவின் உடலை, இறுதிப்பயணத்துக்கு அனுப்ப மறுத்துக் கதறியழுதார் சாண்ட்ரா. எல்லோர் இதயங்களிலும் ரெய்மெண்டோ வாழ்கின்றார் என சாண்டராவுக்கு ஆறுதல் சொல்லி, அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செய்து, இறுதியாத்திரைக்கு அனுப்பி வைத்தார்கள். தலைநகர் ரோமில் அவரது பூதவுடல் புதைக்கப்பட்டது.
ரெய்மெண்டோ இறந்து ஐந்து மாதகாலத்துக்குள் சாண்டராவும் கடந்த மாதம் காலமானார்.
ரெய்மொண்டோ வியனெலோ இறுதிக்கிரிகைகள் நடைபெற்ற அதே தேவாலயத்தில், சாண்ட்ராவின் இறுதிக்கிரிகைகள் நடைபெற்றது.அதே தேவாலயத்தில் நடந்தது. ஆனால் துரதிஷ்ட்டவசமாக குடும்ப வழக்கப்படி, அவரை மிலனோ லம்ப்ராட் மயானத்தில் புதைத்து விட்டார்கள். இந்த ஜோடி தத்தெடுத்து வளர்த்த இரு பிலிபபைன் நாட்டுப் பிள்ளைகள் இப்போது தனித்துப் போய்விட்டார்கள்.
வாழ்க்கையின் 2/3 பகுதியினை ஒன்றாகவே வாழ்ந்து முடித்த அவர்களை இறந்த பின்னர் ஒருவரை ரோமிலும், மற்றவரை மிலானோவிலுமென பிரித்து விடுவது நியாயமா எனக் ககவலை கொண்ட ரசிகர்கள், இதற்காக ஒரு கவனயீர்ப்பு போராட்டமே நடத்தியிருக்கிறார்கள். இவ்விடயம் இரண்டு வாரங்களாக இத்தாலிய பத்திரிகைகளை நிறைத்துக் கொண்டிருந்தது.

மிலானோவின் முக்கிய தெரு ஒன்றிற்கு , அக்காதல் ஜோடியின் பெயரை வைக்க அப்பிரதேசவாசிகள் பரிந்துரை செய்துள்ளனர். இப்போது சொல்லுங்கள். இவர்கள் காதல் ஜோடிகள். இவர்களுக்குச் சிறந்த ஜோடி விருது வழங்குவது என்பது, அந்த விருதுக்குப் பெருமை. வழங்கியவர்க்குப் பெருமை.
No comments:
Post a Comment