உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக லண்டன் பொருளாதார கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் பிரான்கோ சாசி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இது குறித்த செய்தி ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது: உடல் எடை அதிகரித்து பருமனானவர் பட்டியலில் உலகில் பிரிட்டன் 2ம் இடத்தில் உள்ளது.
இது ஒரு நோய் போல் பரவியுள்ளது. மூன்றில் இருவர் உடல் எடை பெருத்து உள்ளனர். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து 70 சதவீதமாக உயரும். குறிப்பிட்ட சில உணவுகள் விலை மலிவாக கிடைக்கிறது. இவற்றை சாப்பிடுவதாலும்,
பரபரப்பான வாழ்க்கை தரமும் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
உணவு தயாரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை.
உணவகங்களில் சாப்பிடுகின்றனர். சரியான எடையில் இருப்பவர்களைவிட உடல் எடை பெருத்தவர்கள், அவர்களது ஆயுள் காலத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறக்கின்றனர். இவர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவும் 25 சதவீதம் அதிகம். இவர்களை எளிதில் சர்க்கரை நோய், இதய நோய், புற்று நோய் போன்றவை தாக்குகின்றன. மூன்றில் ஒரு பிரிட்டன் குழந்தையும் அதிக எடையுடன் உள்ளன. இவ்வாறு பிரான்கோ சாசி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment