Saturday, October 2, 2010

வடமராட்சி கிழக்கின் சில பகுதிகளில் புராதனப் பொருட்கள் கண்டெடுப்பு

யாழ். குடாநாட்டின் வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளான அம்பன், குடத்தனை, நாகர்கோவில் பகுதிகளில் தமிழர்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் புராதனப் பொருட்கள் பலவற்றைக் கண்டெடுத்திருப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல்துறை பேராசிரியர் எஸ்.கிருஷ்ணராசா அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பிரதேசங்களில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படும் இடங்களில் இத்தகைய பொருட்கள் கண்டெடுக்கப்படுவதாகவும், அவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல்துறை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் இப்பிரதேசத்தில் பல்வேறு மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட மணிவகைகள், கூரை ஓடுகள், கொல்லர் பட்டறைப் பொருட்கள் போன்ற மரபுரிமைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நாகர்கோவில் பகுதிகளில் தமிழ் பிராமி வரிவடிவில் நாகபூமி, கொலம், பரராச என்ற சொற்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களும் கிடைத்துள்ளன.
இப்பிரதேசங்களில் மணல் அகழ்வுப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இப்படியான மரபுரிமைப் பொருட்களைக் காணுமிடத்தில் சேகரித்து யாழ்.பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்குமாறும் பேராசிரியர் வேண்டியுள்ளார்.

No comments:

Post a Comment