Saturday, September 18, 2010

கருணை அடிப்படையில் தற்கொலைக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது

கருணை அடிப்படையில் தற்கொலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் புதிய சட்டங்கள் இயற்றப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
கருணை அடிப்படையில் தற்கொலைகளுக்கு உதவி வழங்கும் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் கடமைகளும் இந்த சட்டத்தில் நிர்ணயிக்கப்படவுள்ளது.
கருணை அடிப்படையில் தற்கொலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் ஒரே சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான சட்ட வரைவுத் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருணை அடிப்படையில் தற்கொலைகளுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் கடுயைமான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது.
அநேகமானவர்கள் இந்த சட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருணை அடிப்படையில் தற்கொலைகளுக்கு உதவிகளை வழங்குதல் சுவிட்சர்லாந்தில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகளவு வெளிநாட்டு வயோதிபர்கள் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment