எதிர்வரும் மூன்றாண்டு காலப்பகுதியில் வர்த்தக விமானங்களில் உயிரி எரிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 2050ம் ஆண்டளவில் உயிரி எரிபொருட்களின் அளவை 50 வீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உணவுப் பொருள் உற்பத்தியை பாதிக்காத வகையில் தொடர்ச்சியாக உயிரி எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு சிறந்த திட்டங்கள் தீட்டப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டள்ளது. உயிரி எரிபொருட்களின் மூலம் விமானங்களினால் வெளியிடப்படும் நச்சுப் புகையை 80 வீதத்தினால் குறைக்க முடியும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் உயிரி எரிபொருட்களின் விலை உயர்வாகக் காணப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. |
Monday, September 20, 2010
விமானப் போக்குவரத்தின் போது உயிரி எரிபொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment