எதிர்வரும் 2011ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் சுவிட்சர்லாந்தை லா பெட்டிட் சாம்பர் திரைப்படம் பிரதிநிதித்துவப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவின் கீழ் லா பெட்டிட் சாம்பர் திரைப்படம் விருது வழங்கும் விழாவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ககை, களம், வசன அமைப்பு, திரைப்படத்தின் விறுவிறுப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்தத் படத்தை தெரிவு செய்ததாக சுவிட்சர்லாந்து கலாச்சாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி ஒஸ்கார் பரிந்துரைகள் அறிவிக்கப்படவுள்ளதுடன் பெப்ரவரி மாதம் 27ம் திகதி விருது வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. |
Monday, September 20, 2010
லா பெட்டிட் சாம்பர் என்ற திரைப்படம் ஒஸ்கார் விருதுகளுக்காக தெரிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment