Saturday, September 18, 2010

கோட்டையில் வானில் தோன்றியது என்ன?

கடந்த வியாழக்கிழமை மாலை கோட்டைப் பகுதியில் வான்பரப்பில் அடையாளந்தெரியாத பொருளொன்று தோன்றியுள்ளது. பிரகாஷமான செம்மஞ்சள் நிறத்தில் முட்டை வடிவில் தோன்றிய இது வட கிழக்கு வானிலிருந்து தென்கிழக்கை நோக்கி மிக வேகமாகச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்துள்ளது. அன்று மாலை 6.10 மணியளவில் இவ்விசித்திர உருவம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த பெரும்பாலானவர்கள் இதைக் கண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் காணப்படும் புகைப்படம் அப்பகுதியில் இருந்த ஊடகவியலாளர் ஒருவரால் டிஜிட்டல் கமரா மூலம் படம் பிடிக்கப்பட்டதாகும்.

No comments:

Post a Comment