Friday, September 17, 2010

40 நாட்களாக சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை

சிலி நாட்டில் உள்ள தங்க சுரங்கம் கடந்த மாதம் 5-ந் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் பாதை முழுவதும் அடைத்து கொண்டது. சுரங்கத்திற்கு உள்ளே 33 ஊழியர்கள் சிக்கி கொண்டனர். 700 மீட்டர் ஆழத்தில் அவர்கள் சிக்கி இருக்கிறார்கள்.
அவர்களை மீட்கும் முயற்சி 40 நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக தனியாக பாதை ஒன்றை அமைத்து வருகின்றனர். இந்த பாதை பணி முடிய இன்னும் 3 மாதங்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே அவர்களை மீட்க முடியும். சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களுடன் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அவர்கள் இருக்கும் இடத்துக்கு சிறிய குழாய் பாதை ஒன்று உள்ளது. அதன் வழியாக உணவு மற்றும் மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் ஏரியல் டிசோனா என்பவருடைய மனைவி எலிகாஷ்சுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. குழந்தை பிறந்த செய்தி டிசோனாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment