இது தொடர்பாக அவர் கூறியதாவது : உடற்பயிற்சி செய்வதால் பலருக்கு இதயத்திற்கு நலம் தரும் என்று தெரியும் ஆனால் உடற்பயிற்சியினால் மூளைக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது பலருக்கு தெரியாது. இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. உடற்பயிற்சியினால் மூளைக்கு செல்லும் நரம்புகள் மற்றும் செல்கள் நலமாக வைத்திருக்கின்றன. மூளையை நலமாக வைத்திருக்க ஒரு சில உணவுகள் உள்ளன. இதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயக்க வழிவகை செய்கிறது. மூளையில் நல் இயக்கத்திற்கு ஓமேகா 3 எனும் ரசாயனம் உதவுகிறது. இது சாலமன் மற்றும் ஒரு சில மீன் வகைகளில் கிடைக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடன்ட் அதிகமுள்ள உணவு மற்றும் ஒரு சகங குளிர்பானங்கள் மூளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன. மூளையின் நலத்திற்கு ஒரு கிளாஸ் ரெட் ஒயின், சாலமன் மீன்கள், சாக்லேட், கிரீன் டீ ஆகியன மூளை வளர்ச்சிக்கு உதவுபவை. புத்தகங்கள் வாசிப்பது, குறுக்கெழுத்து போட்டிகளுக்கு விடை கண்டுபிடிப்பது போன்றவை மூளையின் நலத்தை பாதுகாக்கும். சுறுசுறுப்பான இயக்கத்துடன் உள்ளவர்களுக்கு முதுமையில் மறதி ஏற்படும் பாதிப்பு குறையும் என்றும் பேராசிரியர் கூறினார். |
Saturday, August 28, 2010
மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment