Saturday, August 28, 2010

பாடசாலை புத்தகங்களில் ஓரின சேர்கையாளர்களுக்கான பாடம் : நெதர்லாந்தில் அறிமுகம்

ஓரின சேர்க்கை செயல்கள் பல நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் வேறு சில நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன் முதலில் நெதர்லாந்தில்தான் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஓரின சேர்க்கை தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.
ஆனால் இப்போது ஓரின சேர்க்கை பற்றிய கல்வி பள்ளி பாடப்புத்தகத்திலேயே இடம் பெற உள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.பள்ளிக்கூட மாணவர்கள் ஓரின சேர்க்கை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பாடப்புத்த கத்தில் சேர்க்க உள்ளனர்.
ஓரின சேர்க்கை தொடர் பான பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தபாடம் இடம் பெற உள்ளது

No comments:

Post a Comment