Saturday, August 28, 2010

குடிபோதையில் நடுத்தெருவில் மயங்கிக்கிடந்த மாணவி

காதலனுடன் இரவில் கேளிக்கை விடுதிக்கு சென்றப்பெண் அதிக குடிபோதையில் அதிகாலை 3 மணியளவில் நடுத்தெருவில் மயங்கிக்கிடந்துள்ளார், அந்நேரத்தில் அப்பெண்ணிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் போலீஸாரக்கண்டதும் ஓடிவிட்டனர்.
கே.கே. நகரைச் சேர்ந்தவர் அகல்யா (வயது 21) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியான இவர், நேற்று முன்தினம் இரவு ராயபுரத் தைச் சேர்ந்த தனது காத லுடன் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு இருவரும் மது அருந்தி விடிய விடிய கும்மாளம் அடித்தனர்.


அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் தள்ளாடியபடியே இருவரும் ஓட்டலை விட்டு வெளியில் வந்தனர். தனது காரில் அகல்யாவை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் காதலன். உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு அகல்யாவை இறக்கி விட்டார். அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே மயங்கி கீழே சாய்ந்தார்.


டி.சர்ட், குட்டைப் பாவாடை அணிந்திருந்த அகல்யா மல்லாந்து படுத்த நிலையில் மயக்கமானார். அவரது ஆடைகள் கலைந்து அலங்கோலமாக காட்சி அளித்தன. இந்த நேரத்தில் அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர்.


இளம்பெண் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் தனிமையில் மயங்கி கிடப்பதை பார்த்ததும் இவர்களுக்கு காமம் தலைக்கேறியது. 4 பேரும் போதை மயக்கத்தில் இருந்தனர். அகல்யாவின் அருகில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அவரிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட தொடங்கினர்.


இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரோந்து வாகனத்தில் அந்த வழியாக வந்தனர். போலீசை பார்த்ததும் அகல்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இவர்களில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.


இத்தனை பரபரப்புகள் நடந்தும் அகல்யா இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அரை குறை மயக்கத்திலேயே இருந்தார்.


இதையடுத்து பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு அகல்யாவை போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்து வந்தனர். அங்கு தனி அறையில் பாதுகாப்பாக அவரை தூங்க வைத்தனர். நேற்று காலை 6.30 மணியளவில்தான் அவருக்கு மயக்கம் தெளிந்தது. லேசாக கண் விழித்து பார்த்தார்.


நான் எங்கு இருக்கிறேன் என்று அகல்யா கேட்டார். அருகில் இருந்த பெண் போலீசார் போலீஸ் நிலையத்தில் என்றனர். எப்படி இங்கு வந்தேன் என்று அகல்யா திருப்பிக் கேட்க... நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பிளாஸ்பேக்காக சொல்லி முடித்தனர் போலீசார். இதைக்கேட்டு அகல்யா கண்ணீர் வடித்தார்.


பின்னர் அகல்யாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது தாயை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். எழுதி வாங்கிக் கொண்டு அகல்யாவை தாயிடம் ஒப்படைத்தனர். போலீசாருக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டு தள்ளாடியபடியே அகல்யா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். போதை மாணவி ஒருவரின் மயக்க போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.


செக்ஸ் சில்மிஷத்தில் இதற்கிடையே ஈடுபட்டு சிக்கிய வாலிபர் போலீசாரிடம் கூறும்போது, ஓட்டலில் வைத்தே இப்பெண்ணை நாங்கள் பார்த்தோம். ஆனால் அவருடன் வந்த வாலிபரின் தோளில் கையை போட்டபடியே நடக்க முடியாமல் அவர் நடந்து வந்தார். இவர்களது காரை நாங்கள் பின் தொடர்ந்து வந்தோம். இடையில் கார் எங்கோ சென்றுவிட்டது.


இதனால் தி.நகர் முழுவதும் மோட்டார் சைக்கிளில் தேடினோம். உஸ்மான் ரோட்டில் நாங்கள் வந்த போது, அப்பெண் மயங்கி கிடப்பதை பார்த்து அருகில் சென்று பார்த்தோம் என்று தெரிவித்தார். அவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


இதற்கு முன்பு சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகர், அண்ணாநகர் சாந்தி காலனி ஆகிய பகுதிகளில் இதேபோல நவநாகரீக இளம் பெண்கள் சாலையில் மயங்கி கிடந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.


சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் பார்களில் விடிய விடிய தண்ணி ஆறாக ஓடுகிறது. இங்கு கல்லூரி மாணவிகள் பலர் தங்கள் காதலனுடன் குடித்து கும்மாளமடிக்கிறார்கள். இது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பார்களில் கூட்டம் அலைமோதுகிறது.


இதுபோன்ற பார்களுக்கு தங்கள் காதலனுடன் சென்று முதலில் ஸ்னாக்ஸ் மட்டுமே சாப்பிட தொடங்கும் மாணவிகள் நாளடைவில் மொடாக் குடிகாரிகளாக மாறிவிடுகிறார்கள். இதன் பிறகு இதில் இருந்து அவர்களால் எளிதாக மீள முடிவதில்லை.


சென்னை மாணவிகளிடம் இதுபோன்ற மோசமான கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நட்சத்திர ஓட்டல்களின் பார்கள் நள்ளிரவு வரை திறந்திருப்பதே காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.


இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் நேரங்களில் மட்டுமே போலீசார் விழித்துக்கொண்டு செயல்படுவார்கள். டாஸ்மாக் பார்களில் 10 மணி வரையும், நட்சத்திர ஓட்டல் பார்களில் 11 மணி வரையும் மட்டுமே மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

No comments:

Post a Comment