மாரிச்செல்வியின் வாயிலும், காதிலும் விஷம் ஊற்றப்பட்டிருந்தது. மகள் கொலைக்கு தந்தை ரெங்கசாமிதான் காரணம் என்பது தெரியவந்தது. ரெங்கசாமியின் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் மாரிச்செல்வியை விஷ ஊசி போட்டு கொன்றது தெரியவந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் சரண் அடைவதற்காக காளவாசல் பகுதியில் பதுங்கி இருந்த மாரிச்செல்வியின் தந்தை ரெங்கசாமியும் கைது செய்யப்பட்டார். கைதான ரெங்கசாமியிடம் இருந்து ரூ.83,500 பறிமுதல் செய்து போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் விசாரணையில் ரெங்கசாமி அளித்துள்ள வாக்கு மூலம் வருமாறு:- எனது மகள் மாரிச்செல்வி 10-ம் வகுப்பு படிக்கும்போதே ஆண் நண்பர்களுடன் பழக தொடங்கினாள். அவளை கண்டித்தேன். இந்த நிலையில் 12-ம் வகுப்பு வரை படிக்க வைத்தேன். ஆனாலும் அவளது நடத்தை சரியாக இல்லை. அடிக்கடி அவளது ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தாள். இதனை நான் கண்டித்தேன். ஆனால் எனது கண்டிப்பை அவள் அசட்டை செய்தாள். பல ஆண்களுடன் அவளுக்கு தொடர்பு இருந்ததால் எனக்கும், என் குடும்பத் தாருக்கும் அவமானமாக இருந்தது. மாரிச்செல்வியின் காதலர்கள் என்று கடந்த 2 ஆண்டுகளில் 3 பேர் என்னிடம் வந்து பெண் கேட்டனர். அவளை திருமணம் செய்து வைக்கும் படி என்னை கட்டாயப்படுத்தினர். ஆனால் அவர்களை வேறு காரணம் காட்டி திருப்பி அனுப்பினேன். மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவாள் என்று எண்ணினேன். உடனே எனது தங்கை மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தேன். அதற்கு அவள் மறுத்து விட்டாள். இதனால் எனது மனைவி லட்சுமியின் சகோதரர் மகன் மோகனுக்கு திருமணம் செய்து கொடுக்க எனது மனைவி முடிவு செய்தாள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மோகன் சிங்கப்பூரில் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறான். அவன் பார்ப்பதற்கு அரவாணி போன்று இருப்பான். எனவே அவனுக்கு ஆண்மை இருக்காது என்று கருதினேன். இப்போதே மகள் பல ஆண்களுடன் பழகுகிறாள். திருமணத்துக்கு பின்னர் மோகனுக்கு ஆண்மை இல்லாவிட்டால் மகளின் நடத்தை மேலும் மோசமாகி விடும் என்று நினைத்து இந்த திருமணத்தை தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை. நாளை (27-ந்தேதி) மாரிச் செல்விக்கும், மோகனுக்கும் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடானது. எனவே இதனை தடுக்க வேண்டும் என்று யோசித்தபோது மகளை கொலை செய்ய திட்டமிட்டேன். மகள் நடத்தை சரி இல்லாததால் அவளை கொலை செய்யும் திட்டத்தை என் ஒர்க் ஷாப்பில் வேலை பார்க்கும் மூர்த்தி மற்றும் வேல்முருகன், பால முருகன் ஆகியோரிடம் கூறினேன். அவர்களிடம் இந்த கொலையை கச்சிதமாக செய்து விட்டு தற்கொலை என்று முடித்து விடுவோம். பிறகு உங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தேன். அதற்கு 3 பேரும் சம்மதம் தெரிவித்தனர். கடந்த 3 மாதமாகவே மகள் மாரிச்செல்வியை எப்படி கொலை செய்வது என்று திட்டமிட்டோம். கடந்த 23-ந்தேதி விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயன்றோம். அதற்காக எனது மனைவி, மகனை பாங்கிக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் மனைவியும், மகனும் சீக்கிரமாக வீடு திரும்பியதால் மகள் மாரிச் செல்வியை கொலை செய்ய முடியவில்லை. மறுநாள் 24-ந்தேதி மீண்டும் மனைவி, மகனை பாங்கிக்கு பணம் எடுக்க அனுப்பி வைத்தேன். அப்போது மாரிச்செல்வி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். நான் அனுப்பி வைத்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் விஷ ஊசியுடன் வீட்டுக்கு வந்தனர். அப்போது நான் ஒர்க் ஷாப்புக்கு வந்து விட்டேன். இந்த நேரத்தில் 3 பேரும் மாரிச்செல்விக்கு விஷ ஊசி போட்டனர். தற்கொலை செய்து கொண்டதாக ஏமாற்ற அவளது வாயிலும், காதிலும் விஷத்தை ஊற்றி விட்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர். இந்த நேரத்தில் வீடு திரும்பிய நானும், எனது மனைவி லட்சுமியும் ஆபத்தான நிலையில் இருந்த மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அப்போது 3 பேர் வாயில் விஷத்தை ஊற்றி ஊசி போட்டதாக எனது மகள் கூறிவிட்டு மயக்கம் அடைந்து விட்டாள். சிறிது நேரம் கழித்து இறந்து விட்டாள். குடும்ப கவுரவரத்தை காப்பாற்றவே எனது மகளை கொலை செய்தேன். இந்த நிலையில் எனது மனைவி லட்சுமி மகள் சாவு குறித்து போலீசுக்கு தெரிவித்து விட்டாள். போலீசார் விரைந்து வந்து பொன்மேனி பகுதியில் பதுங்கி இருந்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். அப்போது நான் அந்த பகுதியில்தான் பதுங்கி இருந்தேன். என்னை போலீசார் தேடுவதாக அறிந்தேன். இதனால் கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டேன். வழக்கு செலவுக்காக ரூ.83,500 பணத்துடன் காளவாசல் பகுதியில் வக்கீலை சந்திக்க செல்லும் வழியில் போலீசார் என்னை மடக்கி கைது செய்து விட்டனர். இவ்வாறு ரெங்கசாமி போலீசில் தெரிவித்துள்ளார். கைதான ரெங்கசாமி மற்றும் மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகிய 4 பேரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்த போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ் பெக்டர் விஜயகுமார், சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோரை கமிஷனர் பாலசுப்பிரமணியன் பாராட்டினார். |
Saturday, August 28, 2010
பல ஆண்களுடன் ஊர் சுற்றியதால் அவமானம்: குடும்ப கவுரவத்தை காப்பாற்ற மகளை கொலை செய்தேன்; கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment